திருமலை : ஆந்திராவில் ஆடு மேய்த்த பெண் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் இந்துபுரம் மண்டலம் மலுகூர் கிராமத்தில் ஆடு மேய்க்கும் ஜெயம்மா. நேற்றுமுன்தினம் காலையில் ஆடு மேய்க்கச் சென்றார். மாலையில் வீட்டுக்கு வராததால், குடும்பத்தினர் பல இடங்களில் சுற்றித் தேடியும் ஜெயம்மா கிடைக்கவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் கிராமத்தின் புறநகரில் உள்ள வயல்வெளியில் நேற்று காலை ஒரு பெண்ணின் சடலத்தை அப்பகுதி மக்கள் கண்டெடுத்தனர். பெண்ணின் மரணம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இறந்து கிடந்த பெண் ஆடு மேய்க்கும் ஜெயம்மா என அடையாளம் காணப்பட்டது. ஜெயம்மாவின் கழுத்து நெரிக்கப்பட்ட காயங்களைப் பார்த்த போலீசார், அது கொலை என உறுதி செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற நிலையில் அவரிடம் இருந்த 20 ஆடுகளை திருடி சென்றுள்ளனர். ஆனால் ஆடுகளுக்காக ஜெயம்மா கழுத்தை நெரித்து கொன்றதாக போலீசார் முதற்கட்ட முடிவுக்கு வந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலைக்கு வேறு எதாவது காரணம் உண்டா என்ற கோணத்திலும் விசாரனை செய்து வருகின்றனர்.