*சமூக வலைதளத்தில் வீடியோ வைரலாகி பரபரப்பு
திருமலை : ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டம் பரிகி மண்டலம், ஊத்துக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ஹூசைன். இவருக்கு திருமணம் ஆன நிலையில் வேறொரு திருமணம் ஆன பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருப்பது ஹூசைன் மனைவிக்கு தெரியவந்தது. இதனையடுத்து பலமுறை அவரது நடத்தையை மாற்றிக் கொள்ளும்படி கூறியும் மாறவில்லை.
இதனால் பெண்ணுடன் தனியாக வீட்டில் நெருக்கமாக இருப்பதை அறிந்து கொண்ட ஹூசைன் மனைவி நேற்று முன்தினம் குடும்ப உறவினர்களை அழைத்துச் சென்று கையும் களவுமாக பிடித்து இருவரையும் ஊர் மக்கள் முன்னிலையில் அரை மொட்டை அடித்தனர். பின்னர், கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது குடும்பத்தினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.