ஆந்திராவில் பேருந்து நிலைய நடைமேடை மீது பேருந்து ஏறிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். விஜயவாடா பேருந்து நிலையத்தில் நிகழ்ந்த விபத்தில் பயணிகள் சிலர் காயமடைந்தனர். இந்த விபத்தில் அரசு பேருந்து நடத்துனர் வீரய்யா, பேருந்துக்காக காத்திருந்த குமாரி, சிறுவன் அயான்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர். பிரேக் பழுதடைந்ததால் கட்டுபாட்டை இழந்த பேருந்து, நடைமேடை மீது ஏறியதாக தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.