சென்னை: ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு-வுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தின் ஒரே கட்டமாக சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மே 13ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிட்டது. எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பாஜக, பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது.
மொத்தமுள்ள 175 சட்டமன்ற தொகுதிகளின் தற்போது வரை வெளியான வாக்கு எண்ணிக்கை விவரங்களில் 150 இடங்களில் தெலுங்கு தேசம் கூட்டணியும், 25இல் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகித்தது. இதன் மூலம் ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைத்தது. இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில் கூறியதாவது, மக்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் நிறைவேற்ற வாழ்த்துகள். ஆந்திர மாநிலத்திற்கு செழிப்பான முன்னேற்றத்தை கொண்டு வரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.