லண்டன்: விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் 4வது சுற்றுப் போட்டியில் ரஷ்ய வீராங்கனை அனஸ்டாஸியா பாவ்லியுசென்கோவா அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். விம்பிள்டன் ஓபன் டென்னிஸ், மகளிர் ஒற்றையர் 4வது சுற்றுப் போட்டியில் நேற்று, ரஷ்ய வீராங்கனை அனஸ்டாஸியா பாவ்லியுசென்கோவா, பிரிட்டன் வீராங்கனை சோனே கார்டல் மோதினர். இப்போட்டியில் துவக்கம் முதல் சிறப்பாக ஆடிய அனஸ்டாஸியா 7-6 (7-3), 6-4 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். ஆடவர் ஒற்றையர் 4வது சுற்றுப் போட்டியில் ரஷ்ய வீரர் கரென் காஷனோவ், போலந்து வீரர் காமில் மஜ்சிர்ஸாக் மோதினர். இப்போட்டியில் எந்தவித சிரமமும் இன்றி துடிப்புடன் ஆடிய காஷனோவ் 6-4, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்றார். இதன் மூலம், காலிறுதிக்கு அவர் முன்னேறினார்.
அசத்திய அனஸ்டாஸியா: காலிறுதிக்குள் நுழைந்தார்
0