Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

ஆனைமலை விற்பனை கூடத்தில் ரூ.42.16 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

ஆனைமலை : பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. ஏலத்திற்கு ஆனைமலை மற்றும் கோட்டூர், பொள்ளாச்சி அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 98 விவசாயிகள் மொத்தம் 577 மூட்டை கொப்பரை கொண்டு வந்திருந்தனர். அவை தரம் பிரித்து ஏலம் விடப்பட்டது.

இதில் முதல் தரம் 278 மூட்டை கொப்பரை ரூ.191 முதல் ரூ.206 வரையிலும். 299 மூட்டை இரண்டாம் தர கொப்பரை ரூ.151 முதல் ரூ.175 வரை என 259 குவிண்டால் கொப்பரை மொத்தம் ரூ.42.16 லட்சத்துக்கு ஏலம் போனது. இதனை 8 வியாபாரிகள் கொள்முதல் செய்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.