ஈரோடு: சென்னிமலை அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியை கொலை செய்த வழக்கில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று ஓட்டன்குட்டை காரியங்கட்டைச் சேர்ந்த விவசாயி முத்துசாமி, அவரது மனைவி சாமியாத்தாள் கொலை செய்யப்பட்டுள்ளனர். முதிய தம்பதியை கொன்று 15 சவரன் நகைகள், ரூ.60 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. ஜெயபால் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.