திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட மெய்யூர் கிராமத்தில் புதிய காலனி பகுதியில் வண்டிப்பாதை மற்றும் நீர்வரத்து கால்வாய் உள்ளது. இந்த வண்டிப்பாதை மற்றும் நீர்வரத்து கால்வாய் அருகே நிறைய பனை மரங்கள் உள்ளன. இந்தநிலையில், இதனருகே தனியார் ஒருவர் நிலம் வாங்கியுள்ளார்.இதையடுத்து வண்டி பாதை மற்றும் நீர்வரத்து கால்வாய் அருகே உள்ள பனைமரங்களை ஜேசிபி எந்திரம் மூலம் தோண்டி எடுத்துவிட்டு அந்த நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது.
தனியார் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு வண்டிப்பாதை மற்றும் நீர்வரத்து கால்வாயை மீட்டுத்தர வலியுறுத்தி கிராம மக்கள் சார்பில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் மு.பிரதாப், ‘’ மனு மீது உரிய விசாரனை நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்து உள்ளார்.