சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனை 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அஸ்வத்தாமனை 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் மனுத் தாக்கல் செய்துள்ளனர். 7 நாட்கள் காவலில் விசாரிக்க போலீஸ் அனுமதி கேட்ட நிலையில் 4 நாட்களுக்கு அனுமதி வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்.