சண்டிகர்: பஞ்சாப்பின் அமிர்தசரசில் உள்ள மஜிதா சாலை பைபாசில் நேற்று காலை 9.30 மணி அளவில் காலி இடத்தில் வெடிகுண்டு வெடித்தது. இதில் அங்கிருந்த ஒரு நபர் இரு கைகள் துண்டாகி பலியாகி கிடந்தார். சடலத்தை கைப்பற்றி போலீசார் சோதனை நடத்தியதில், இறந்த நபர் பாபர் கல்சா இன்டர்நேஷனல் உள்ளிட்ட சில காலிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுடன் சம்மந்தப்பட்டவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வெடிகுண்டை எடுப்பதற்காக அந்த நபர் வந்த போது அது வெடித்து அவர் பலியானதாகவும், சடலத்தின் சட்டை பையில் இருந்து சில முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளது.
அமிர்தசரசில் குண்டுவெடித்து காலிஸ்தான் தீவிரவாதி பலி
0