தஞ்சாவூர், நவ.7: அம்மாபேட்டையில் இரு சக்கர வாகனம் திருடிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை மகிமாலை பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் முத்து (20). தஞ்சை ராஜப்பா நகர் பகுதியைச் சேர்ந்த மூக்கையன் மகன் சரவணன் (30). இவர்கள் இரண்டு பேரும் கடந்த மாதம் 20ம் தேதி இரு சக்கர வாகனம் திருடியதாக அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. அதையடுத்து நேற்று மதியம் புலோரநத்தம் பெட்ரோல் பங்க் அருகில் முத்துவும், அதேபோல் தளவாய்பாளையம் பகுதியில் சரவணனையும் அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் கரிகாலசோழன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரையும் பாபநாசம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.