தேனி :கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி.தினகரன் ஒன்றாக இணைந்து தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.தேனியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டிடிவி தினகரன் , “கட்சியில் நம்முடன் இருந்தவர்கள் 90% பேர் நம்முடன் தான் இருக்கின்றனர்.யாரோ ஒரு சிலர் தான் விலை போய் உள்ளனர். கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யார் என்று ஜெயலலிதா தொண்டர்களுக்கு தெரியும். கோடநாடு வழக்கில் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் சாட்சிகள் கலைக்கப்பட்டன.
அம்மாவின் தொண்டர்கள் மடியிலே கனம் இல்லாதவர்கள். நெஞ்சிலே வீரம் மிக்கவர்கள்; இங்கே இருப்பவர்கள் தொண்டர் படை, அங்கே இருப்பவர்கள் குண்டர் படை… டெண்டர் படைதான் அங்கே இருக்கிறது. விசுவாசம் என்றால் என்ன என்பது அவர்களின் கண்களுக்கு தெரியாது; ஏனெனில் அவர்கள் துரோகத்தை தவிர, வேறு எதையும் அறியாதவர்கள்; அச்சாணி முறிந்து போனவர்கள்; டெண்டருக்காக ஒன்று கூடியவர்கள்.அவர்களுக்கு பொழுது போகவில்லை என்றால் சந்தில் சிந்துபாடி, சிந்துபாத் வேலை பார்ப்பவர்கள்; அச்சாணியை பற்றி பேசுகிறார்கள். ஒரு இயக்கத்தின் உண்மையான அச்சாணி விசுவாசமிக்க தொண்டர்கள் என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை.
எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சியை இன்று துரோகத்தால், ஒருசிலர் அபகரித்திருக்கிறார்கள்; அதை மீட்டு தொண்டர்களின் கையில் கொடுப்பதற்காகத்தான் நாங்கள் இருவரும் ஒன்றிணைந்துள்ளோம்.ங்களுக்கு டெண்டர் ஆசையில்லை; சந்திலே சிந்து பாட ஆசையில்லை; ஊழல் செய்வதில் நம்பிக்கையில்லை. கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்துக்கு காரணமானவர்கள் யார் என்று ஜெ. தொண்டர்களுக்கு தெரியும்.,”என்றார்.