சென்னை: அமித்ஷா வரும் 7ம் தேதி (நாளை) மீண்டும் தமிழகம் வர இருந்தார். அப்போது பாஜவை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வலுப்படுத்துவதற்கான ஆய்வுகளை அவர் மேற்கொள்ள இருந்தார். தொகுதி வாரியான ஆய்வு பணிகளையும் அமித்ஷா மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது. வரும் 8ம் தேதி தமிழக பாஜ மூத்த தலைவர்கள் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்களையும் அமித்ஷா சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியானது.
தமிழக பாஜ நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்த பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோரை சந்தித்து அவர் பேசுவார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் அமித்ஷாவின் 7ம் தேதி (நாளை) தமிழகம் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.