டெல்லி: அமித் ஷா மீது கனடா அரசு கூறிய குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள கனடா தூதரக அதிகாரியை நேரில் அழைத்து வெளியுறவுத்துறை கண்டனத்தை பதிவு செய்தது. இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் கனடா அரசு அதிகாரிகள் திட்டமிட்டு தகவலை கசியவிட்டிருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளது. பொறுப்பற்ற செயல்பாடுகள் இந்தியா - கனடா உறவில் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement


