டெல்லி: பெரும் பரபரப்பான அரசியக் சூழலுக்கு இடையே நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் வரும் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள் அமர்வு பழைய நாடாளுமன்ற கட்டடத்திலும் அடுத்த 4 நாட்கள் அமர்வு புதிய கட்டடத்திலும் நடைபெற உள்ளது. சிறப்புக் கூட்டத்தின் முதல்நாள் அமர்வில் 75 ஆண்டுகால நாடாளுமன்ற பயணம் குறித்து விவாதிக்கபட உள்ளது.
தேர்தல் ஆணையர் நியமன பணிநிலை மசோதா, அச்சு ஊடகம் மற்றும் பதிவுகள் மசோதா தாக்கல் செய்யபட உள்ளது. வழக்கறிஞர் திருத்த மசோதா, தபால் அலுவலக மசோதா ஆகிய 4 மசோதாக்கள் தாக்கல் செய்யபட உள்ளன. இந்த மசோதா கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தொடரில் நிகழ்ச்சிக்கான நிரல் அறிவிக்கப்படாததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். அவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குழு புகைப்படம் எடுக்கப்படும் எனவும் புதிய கட்டிடத்திற்கு அனைவரும் செல்வோம் என்றும் கூறியுள்ளார்.