அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் புகழ்பெற்ற சத் பூஜையை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்தியாவின் வடமாநிலங்களில் சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சாத் பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் நியூ ஜெர்சி, நியூயார்க்கில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் நீர் நிலைகளில் திரண்டு பாரம்பரிய முறைப்படி சத் பூஜையை கொண்டாடினர். பூஜை பொருட்கள் வைத்து தீபங்கள் ஏற்றி சூரிய பகவானை வழிபட்டனர். நீண்ட ஆயுள் மற்றும் குடும்பநலனை வேண்டி பிரார்த்தனை செய்தனர். சத் பூஜையை முன்னிட்டு நீர் நிலைகள் அமைந்துள்ள பகுதி மணல்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்காவிலும் விமரிசையாக நடைபெற்ற சத் பூஜை: நீர்நிலைகளில் திரண்டு இந்திய வம்சாவளியினர் வழிபாடு..!!
202