அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுக்செயின் சிங் என்ற என்ஆர்ஐ அண்மையில் அமெரிக்காவில் இருந்து வந்தார். இவர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள டபுர்ஜி கிராமத்தில், தன் மனைவி, முதல் மனைவியின் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் சுக்செயின் சிங் நேற்று காலை நடைபயிற்சிக்கு புறப்பட்டபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் சுக்செயினை தடுத்து நிறுத்தி அவரது வீட்டுக்குள் அழைத்து சென்றனர்.
பின்னர் அவர் வைத்துள்ள விலை மதிப்பு மிக்க சொகுசு காரின் பதிவு ஆவணங்களை தரும்படி சிங்கை மிரட்டி உள்ளனர். அப்போது சுக்செயினை சுட்டு கொன்றுவிட்டு மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. இதுகுறித்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.