நியூயார்க்: அமெரிக்காவில் அடுத்த மாதம் பிரதமர் மோடி பங்கேற்கும் சமூக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுமார் 24000 புலம்பெயர் இந்தியர்கள் பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் அடுத்த மாதம் 26ம் தேதி நடைபெறும் ஐநா பொது சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். அப்போது பிரதமர் மோடி இந்திய அமெரிக்க சமூகத்தினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மெகா சமூக நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்நிலையில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்க இந்தியர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். 42மாகாணங்களில் இருந்து இந்திய அமெரிக்கர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. யூனியன்டேலே, லாங் தீவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 590 சமூக அமைப்புகள் பதிவு செய்து வருகின்றன. இதுவரை சுமார் 24000 பேர் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பதிவு செய்துள்ளனர்.இந்த வரலாற்று நிகழ்ச்சியில் முடிந்தவரை அதிகமான மக்கள் பங்கேற்பதை உறுதி செய்ய கடமைப்பட்டுள்ளதாக இந்திய அமெரிக்க சமூக அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் அடுத்த மாதம் பிரதமர் மோடி உரை: நிகழ்ச்சியில் பங்கேற்க 24000 இந்தியர்கள் பதிவு
previous post