வாஷிங்டன் : ஒரேநாளில் ரூ.900 கோடி அளவுக்கு அமெரிக்காவில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவில், “சென்னை, மதுரை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் 4,100 வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நோக்கியா ரூ.450 கோடி, மைக்ரோசிப் ரூ.250 கோடி, இன்பிங்ஸ் ரூ.50 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில் மேலும் முதலீடுகள் ஈர்க்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.
ஒரேநாளில் ரூ.900 கோடி அளவுக்கு அமெரிக்காவில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
previous post