Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

அமெரிக்காவில் உயர்நிலை பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு..!!

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உயர்நிலை பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் ஜியார்ஜியாவின் பாரோ கவுண்டி மாகாணத்தில், அப்பலாஜி என்ற இடத்தில் உயர்நிலைப்பள்ளி உள்ளது. விண்டெர் நகரில் உள்ள அபலாச்சி உயர்நிலைப் பள்ளியில் நேற்று 14 வயது மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவரது சக மாணவர்கள் இருவரும், ஆசிரியர்கள் இருவரும் கொல்லப்பட்டனர். மேலும், இச்சம்பவத்தில் 9 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.

இங்கு மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாயினர். பலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்ததாகவும் நகர போலீசார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. புதிய கல்வி ஆண்டு தொடங்கிய சில நாள்களில் நடைபெற்ற இச்சம்பவம் அமெரிக்காவை உலுக்கியுள்ளது.