தெஹ்ரான்: இஸ்ரேல் – ஈரான் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் உட்சபட்ச தலைவர் அலி கமேனி குறித்து பல முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அணு ஆயுதம் விவகாரம் தொடர்பாக ஈரானை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களத்தில் குதித்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் இரு நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்து வருகிறார் ஈரானின் உட்சபட்ச தலைவர் அலி கமேனி.
தற்போது நடந்து வரும் ஈரானுக்கு எதிரான போரில் அலி கமேனியை பற்றித்தான் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக அலி கமேனியின் மூதாதையர்கள் இந்தியாவில் வாழ்ந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. உத்திரப் பிரதேசம் மாநிலம் பரவாங்கி மாவட்டம் சிவுலிகோவுஸ்பூர் அருகே உள்ள கிந்தூர் கிராமம் தான் அலி கமேனியின் மூதாதையர்கள் பிறந்ததாக வரலாறு குறிப்பிடுகிறது. இந்த கிந்தூர் தான் 1790ம் ஆண்டு பிறந்த இஸ்லாமிய சியா அறிஞரான சையது அகமது மூசாவின் புறப்பிடமாகும். அவரது சந்ததியினர் ஈரான் அரசியல் மற்றும் மத நிலப்பரப்பை மறுவடை அமைக்க சென்றனர்.
அவரது பரம்பரையில் 1979 இஸ்லாமிய புரட்சியின் சிற்பியான அயத்துல ரூபாலா கமேனி மற்றும் ஈரானின் தற்போதைய உச்சபட்ச தலைவரான அலி கமேனி ஆகியோர் அடங்குவார்கள். 1830ம் ஆண்டில் சையத் அகமது மூசாவி தனது 40 வயதில் கிந்தூரில் இருந்து புறப்பட்டு அவர் நவாப்புடன் ஈரானுக்கு புனித யாத்திரை மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்த ஈரானுக்கு பயணம் செய்து இறுதியில் குமி கிராமத்தில் குடியேறினார். தனது இந்திய வம்சாவளியை குறிக்கும் விதமாக அவர் இந்தி என்ற பெயரை ஏற்று கொண்டார். சியா அறிஞர் வட்டாரங்களில் சையத் அகமது மூசாவி இந்தி என அறியப்படுவார். அவரது குடும்பம் மத புலமையில் மூழ்கி இருந்தது. பல சகாப்தங்களுக்கு பிறகு அவரது பேரன் ரூஹுல் கமேனி மேற்கத்திய ஆதரவு பெற்ற பக்லாவா முடியாட்சிக்கு எதிராக முன்னணி எதிர்ப்பு குரலாக உருவெடுத்தார்.
1978ம் ஆண்டின் ஷாவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்த போது ஈரானிய ஆட்சி ஒரு அரசாங்க செய்தி தாளில் கமேனியை இந்திய முகவர் என்று ஒரு முத்திரை குத்தி அவமதிக்க முயன்றது. அவதூறு பிரச்சாரம் பொதுமக்களின் கோபத்தை தூண்டியது. இது ஷாவின் வீழ்ச்சிக்கு 1979ல் இஸ்லாமிய குடியரசு பிறப்பதற்கும் வழிவகுத்தது. கமேனி ஈரானின் உச்சத்தலைவர் ஆவர். அவரது வாரிசான அலி கமேனியும் அதே மூசாவி குடும்ப வம்சாவளியை சேந்தவர். இன்றும் உத்திரப் பிரதேசத்தில் கிந்தூர் கிராமத்தில் ஒரு பகுதியான கமேனியின் மரபு வழி வந்தவர்கள் வாழ்த்து வருகின்றனர். இந்திய கிராமத்தில் இருந்து ஆரம்பித்த ஒரு அறிஞரின் ஆன்மீக பயணம் இன்று மிகவும் செல்வாக்குமிக்க இஸ்லாமிய நாடுகளின் ஒன்றில் அரசியல் டிஎன்ஏ-வின் ஒரு பகுதியாக மாறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.