*சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை
ஆம்பூர் : ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலத்தில் பைப்லைன் உடைப்பு காரணமாக கடந்த 20 நாட்களாக காவிரி குடிநீர் வெளியேறி வீணாகி வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், மாதனூர் ஒன்றிய பகுதிகளில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பைப்லைன் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனம் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தை ஒட்டி உள்ளது.
இந்த பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் பைப்லைன் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் காவிரி குடிநீர் வீணாக வெளியேறுவதாகவும், சீர் செய்து தரவும் அப்பகுதியினர் குடிநீர் வடிகால் வாரியத்தை சார்ந்த அலுவலர்களுக்கு புகார் தெரிவித்தனர். ஆனால், 20 நாட்களாகியும் எந்த வித நடவடிக்கையும் இல்லையாம். எனவே அப்பகுதியினர் உடனே சீர் செய்து தர கோரி தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.