வாஷிங்டன்: இந்தியாவின் வெளியுறவு செயலாளராக இருந்த வினய் மோகன் குவாத்ரா கடந்த ஜூலை 14ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து அமெரிக்காவுக்கான இந்திய தூதராக அவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக வினய் மோகன் குவாத்ரா வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
நானும் எனது குழுவினரும் இருநாடுகளின் உறவை வலுப்படுத்த தீவிரமாக பணியாற்றுவோம் என்று வினய் மோகன் குவாத்ரா தெரிவித்துள்ளார்.