மதுரை: அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உயர்மட்ட விசாரணைக் குழு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்திருந்தது. அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரியதை அடுத்து ஐகோர்ட் கிளை வழக்கை செப்.26க்கு ஒத்திவைத்தது.