அம்பர்கிரிஸ் (Ambergris) என்பது எண்ணெய்த் திமிங்கிலத்தின் செரிமான உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றும் ஒரு வகை திடக்கழிவுப் பொருள். இதை திமிங்கிலத்தின் எச்சம் என்பார்கள். இது வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்து இருக்கும். எண்ணெய்த் திமிங்கிலமானது பீலிக்கணவாய் போன்ற உயிரினங்களை வேட்டையாடி உண்பது வழக்கம். அந்த பீலிக்கணவாயின் ஓட்டை இத்திமிங்கிலங்களின் செரிமான அமைப்பால் செரிக்கவைக்க முடியாது. அதனால் இந்த ஓடுகள் திமிங்கிலத்தின் குடலில் சிக்கிக்கொள்ளும். இந்த ஓட்டினால் திமிங்கிலத்தின் உள் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த ஓட்டை சுற்றி செரிமான அமைப்பிலிருந்து ஒரு சிறப்பு வகை திரவம் உற்பத்தியாகிறது. இதனை அம்பர்கிரிஸ் என்பர். இது நறுமணப் பொருட்கள் மற்றும் பாலியியல் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அம்பர்கிரிசை சில சமயம் எண்ணெய்த் திமிங்கிலங்கள் வாய் வழியாக வாந்தியெடுப்பதன் மூலம், வெளியேற்றுகிறது. சில எண்ணெய்த் திமிங்கிலங்கள் மலப்புழை வழியாகவும் இதை வெளியேற்றுகிறது.
எண்ணெய்த் திமிங்கிலம் தன் உடலின் செரிமாண உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றிய வாந்தி, கடலின் மேற்பரப்பில் மிதக்கிறது. சூரிய ஒளி மற்றும் உப்புநீரும் சேர்ந்து இந்த எச்சத்தை அம்பெர்கிரிஸ் எனும் பொருளாக உருவாக்குகின்றன. அம்பர்கிரிஸ் எனும் வாந்தி நறுமணப் பொருள்களை தயாரிக்கப் பயனுள்ளதாக இருக்கிறது.திமிங்கில வாந்தி எனும் அம்பெர்கிரிஸ் கறுப்பு, வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் எண்ணெய் நிறைந்த பொருள் ஆகும். இது நீள்வட்ட அல்லது வட்ட வடிவத்தில் காணப்படும். இது கடல்நீரில் தொடர்ந்து மிதந்து பயணம் செய்வதால் அத்தகைய வடிவம் ஏற்படுகிறது. எண்ணெய்த் திமிங்கிலத்தின் தலையில் ஸ்பெர்மாசிட்டி எனப்படும் ஒரு உறுப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. இது எண்ணெயால் நிரம்பியுள்ளது. இது திமிங்கிலத்தின் விந்து என்றும் நம்பப்பட்டது. எனவே, இதற்கு விந்துத் திமிங்கிலம் எனப் பெயர் சூட்டப்பட்டது. ஆனால், இந்த உறுப்பு உண்மையில் ஒலி சமிக்ஞைகள் மற்றும் மிதப்பைக் கட்டுப்படுத்துவதில் உதவுகிறது.
திமிங்கில வாந்தியின் மணம் முதலில் கெட்ட நாற்றம் கொண்டதாக இருக்கும். ஆனால், நேரம் செல்லச் செல்ல, உலர்ந்த பிறகு அது நறுமணமாக மாறும் என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். வாசனைத் திரவியத்தின் வாசனை காற்றில் விரைவாகக் கரைவதைத் தடுக்க அம்பெர்கிரிஸ் ஒரு நிலைப்படுத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது. எண்ணெய்த் திமிங்கிலம் தனது உடலிலிருந்து வெளியேற்றிய அம்பர்கிரிஸ் எனப்படும் வாந்தி கரையை அடைய பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகும். இது எத்த அளவுக்கு பழசாகவும், பெரியதாகவும் உள்ளதோ அந்த அளவுக்கு அதிக விலை வழங்கப்படும். இந்தியாவில் குஜராத் மாநிலத்தின் தீபகற்பக் கடலிலும், ஒடிசா கடலிலும் திமிங்கில வாந்தி எனும் அம்பர்கிரிஸ் சேகரிக்கப்படுகிறது.
இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் மற்றும் விதிகளின்கீழ் திமிங்கில வாந்தி வெளியிடும் எண்ணெய்த் திமிங்கிலங்கள் பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் தகுதியைப் பெற்றுள்ளன. 1986-ம் ஆண்டு முதல் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் 2வது அட்டவணையின்கீழ் இந்தியாவில் ஸ்பெர்ம் திமிங்கிலங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் ஸ்பெர்ம் திமிங்கிலங்கள் அல்லது அவற்றின் உறுப்புகளை வர்த்தகம் செய்வது சட்டவிரோதமானது. எனவே திமிங்கில வாந்தி வணிகத்திற்கு உரிமம் பெறுவது கட்டாயம். அரபு நாடுகளில் திமிங்கில வாந்தி எனும் அம்பர்கிரிசுக்கு அதிக தேவை உள்ளது.எண்ணெய்த் திமிங்கிலத்தின் எலும்புகள், எண்ணெய் மற்றும் வாந்தி ஆகியவற்றுக்காக அதிகம் வேட்டையாடப்படுகின்றன. இதனால் 1970-ம் ஆண்டு முதல் ஐரோப்பா, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அம்பர்கிரிஸ் வணிகத்
தடைச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது.