சென்னை: பாஜக மாநில விளையாட்டு பிரிவு தலைவரும் அண்ணாமலையின் நெருங்கிய நண்பருமான அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பனையூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பாஜக கொடிக் கம்பத்தை அகற்ற சென்ற அரசு ஊழியரை தாக்கிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதாகவும் பொது சொத்துகளை சேதப்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.