தூத்துக்குடி: அமலி நகரில் ஆயிரக்கணக்கான குடும்பங்களை சேர்ந்த மீனவர்கள் இந்த போராட்டத்தில் திரண்டு இருக்கின்றனர். இவர்களின் கோரிக்கை என்னவென்றால் இந்த அமலி நகரில் துண்டில் பாலம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கடலுக்கு செல்லக்கூடிய மீனவர்கள் மீண்டும் கரைக்கு வரும்பொழுது அங்கு கடல் சிற்றம் காரணமாகவும், மண்ணரிப்பு காரணமாகவும் அவர்கள் கரைக்கு பாதுகாப்பாக வந்து சேர முடியவில்லை இதனால் இரண்டு பேர் உயிரிழந்திருக்கின்றனர், பல படகுகள் சேதம் அடைந்திருக்கின்றன எனவே இந்த சூழ்நிலையும் மாற்றுவதற்காக தூண்டில் பாலம் அமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாது இந்த பகுதியில் துண்டில் பாலம் அமைக்கப்படும் பொழுது தான் இந்த சேதங்கள் என்பது நடைபெறாமல் இருக்கும் அதற்காகத்தான் 10 நாள் போராட்டம் நடத்தியுள்ளோம் என்றும் இனிமேல் உண்ணாவிரதம் போராட்டம் இன்று முதல் தொடங்கி உள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு முன்னெடுக்க கூடிய விஷயங்கள் ஏன் எங்களுக்கு தாமதமாகிறது, தமிழக அரசி நீதி ஒதுக்கிய பிறகும் எதற்க்கு தாமதம் என்பது இவர்களது கேள்வியாகும்.