நிலக்கடலை, பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ்கள் எல்லாமே உடல்நலத்திற்கு எண்ணிலடங்கா பல சத்துகளை தரக்கூடியவை. நிலக்கடலையைப் பல்வேறு உணவுகளில் சேர்த்து சாப்பிடும் நாம் பாதாமை மட்டும் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைத்து வைக்கிறோம். அதாவது பாலோடு கலந்து சாப்பிடுவது, பாயாசம், ஸ்வீட்ஸ்களில் மேலே தூவி சாப்பிடுவது என ஸ்பெஷல் கிரேடு கொடுத்து விடுகிறோம். பாதாம் பருப்பை அப்படியே சாப்பிடலாம்
அல்லது ஊறவைத்தும் சாப்பிடலாம் என்பதும் நமக்குத் தெரியும். இதுதவிர பாதாமைக்கொண்டு இந்த சிறப்பு உணவுகளையும் சமைத்து சாப்பிடலாம். ட்ரை பண்ணுங்க!
ஆல்மண்ட் ஸ்வீட் பொட்டேடோ டோஸ்ட்
தேவையானவை
தோல் உரிக்கப்படாத பாதாம் – 3/4 கப்
பிரட் துண்டுகள் – 4
சர்க்கரைவள்ளிக் கிழங்கு – 2 கப்
(வட்டமாக வெட்டப்பட்டு ரோஸ்ட் செய்யப்பட்டது)
உப்பு – தேவைக்கேற்ப
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
சாட் மசாலா – 1/2 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை – 2 டீஸ்பூன்
நறுக்கிய இஞ்சி – 1 டீஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் – 1/2 டீஸ்பூன்
கிரீன் சட்னி – 1 மேசைக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் – 1 டீஸ்பூன்.
செய்முறை
பாதாமினை நான்கு நிமிடம் 180 டிகிரியில் மைக்ரோவேவ் அவனில் வறுக்கவும். மைக்ரோ அவன் இல்லை என்றால் சாதாரண சட்டியில் வறுக்கலாம். பிறகு ஆறியதும் மெல்லியதாக சீவிக்கொள்ளவும். அதேபோல் பிரட்
துண்டுகளையும் நன்கு டோஸ்ட் செய்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பிரட் மற்றும் வறுத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நறுக்கிய பாதாமினைத் தவிர மற்ற அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பிரட் துண்டுகள் மேல் சர்க்கரை வள்ளிக் கிழங்கு துண்டுகளை வைத்து அதன்மேல் கலந்த மசாலாக்களை பரப்பி அதன்மேல் பாதாமினை தூவி பரிமாறலாம்.
ஆல்மண்ட் காலிபிளவர் ரைஸ் சாலட்
தேவையானவை
தோல் உரிக்கப்படாத பாதாம் – 1 கப்
துருவிய காலிபிளவர் – 2 கப்
உப்பு – தேவைக்கேற்ப
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை – 1 மேசைக்கரண்டி
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்
நறுக்கிய இஞ்சி – 1 டீஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி.
செய்முறை
பாதாமினை நான்கு நிமிடம் 180 டிகிரியில் மைக்ரோவேவ் அவனில் வறுக்கவும். மைக்ரோ அவன் இல்லை என்றால் சாதாரண சட்டியில் வறுக்கலாம். பிறகு ஆறியதும் மெல்லியதாக சீவிக் கொள்ளவும். ஒரு கடாயில் ஆலிவ் எண்ணெய் சேர்த்து அதில் சீரகம் பொரிந்ததும் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் துருவிய காலிபிளவரை சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும். அதன்பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு அதில் எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள், உப்பு மற்றும் பாதாமினை சேர்த்து நன்கு கலக்கவும். இது மிகவும் சுவையான சத்துள்ள சாலட். டயட் இருப்பவர்களுக்கு இது மிகவும்
ஆரோக்கியமான உணவு.