கேரளா: கேரளா களமசேரியில் வழிபாட்டு கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து, நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். இன்று காலை ஜெஹோவா விட்னெசெஸ் மத வழிபாடு கூட்டத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் பெண் ஒருவர் பலியானார். மேலும் 36 பேர் படுகாயம் அடைந்தனர்.