தென்காசி: குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. கனமழை குறைந்து அருவிகளில் சீராக நீர் வரத் தொடங்கியது. இதனால் குற்றாலம் அருவிகளில் 3 நாட்களுக்குப் பின் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குற்றாலம் சென்ற சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குற்றாலம் அருவிகளில் 3 நாட்களுக்குப் பின் குளிக்க அனுமதி
175
previous post