சென்னை: ஆவின் பால் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை, லிட்டருக்கு 3 ரூபாய் என்ற அடிப்படையில் வழங்க, 140.98 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கடந்த 2023, டிசம்பர் 18, 2024, ஜனவரி முதல், ஜூன் வரை, 165.12 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
ஜூலை முதல் அக்டோபர் வரை, 140.98 கோடி ரூபாய் என, மொத்தம் 295.97 கோடி ரூபாய், பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.