பெங்களூரு: நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டுவதாக பெங்களூருவில் நடந்த சுதந்திர தின விழா உரையில் ஒன்றிய அரசு மீது கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். “மக்கள் தீர்ப்புக்கு எதிரான கொல்லைப்புற அரசியலை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். அரசியலமைப்பு கோட்பாடுகளை ஒன்றிய அரசு புறக்கணிக்கிறது” என சித்தராமையா ஒன்றிய அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.