சென்னை: அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2025 ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்துகொள்ள தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து தேர்வு கட்டணம் ரூ.200 செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதனிலை தேர்வுகள் கருத்தியல் தேர்வு 15.10.2024 அன்றும் மற்றும் செய்முறை தேர்வு 16.10.2024 ஆகிய தேதிகளில் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். இதற்கான முழு வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். தனித்தேர்வராக தேர்வு எழுத இன்று (4ம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வராக விண்ணப்பிக்க கடைசி தேதி 18.9.2024. அதற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.