மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த தேவனேரி இசிஆர் சாலையொட்டி உள்ள தனியார் ரிசார்ட்டில், அகில இந்திய கட்டுனர் சங்கம் சார்பில் மாநில அளவிலான பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், மாநில தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார். அகில இந்திய தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். செங்கல்பட்டு அமைப்பு குழு தலைவர் வெங்கடேசன், செங்கல்பட்டு மைய தலைவர் வேலாயுதம் ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்தில், கல்குவாரிகளுக்கு பணம் கட்டி 3 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி கிடைக்கிறது. இதற்கு, 3 மாத காலத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும். ஜல்லி, மணல், எம்-சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை குறைக்க வேண்டும். ஒப்பந்ததாரர்களுக்கு விலை விகித பட்டியல் நியாயமாக 15 முதல் 20 சதவீதம் ஏற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை முன்வைத்து, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.