Monday, April 15, 2024
Home » பாஜவுடன் கூட்டணி? அன்புமணிக்கு எதிர்ப்பால் பாமக அவசர கூட்டம்: மாவட்ட செயலாளர்களுடன் ராமதாஸ் இன்று ஆலோசனை

பாஜவுடன் கூட்டணி? அன்புமணிக்கு எதிர்ப்பால் பாமக அவசர கூட்டம்: மாவட்ட செயலாளர்களுடன் ராமதாஸ் இன்று ஆலோசனை

by Ranjith

மக்களவை தேர்தல் தேதி இன்று அல்லது நாளை அறிவிக்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில், தமிழ்நாட்டில் பாஜ கூட்டணிக்காக பாமக, தேமுதிக மற்றும் சிறிய கட்சிகளுடன் பேரம் பேசி வருகிறது. அதிமுகவும் இதே கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் தைலாபுரத்தில் ராமதாசை சந்தித்து பேசினார். இதில் ராமதாஸ் கேட்ட 7 தொகுதி மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டுதர தர அதிமுக சம்மதம் தெரிவித்ததால் கூட்டணி வைக்க சம்மதித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஷாக்கான பாஜ அன்புமணியிடம் பேரம் பேசியது. அப்போது, அன்புமணி மீது உள்ள ஒரு வழக்கை சுட்டிக்காடி ஒன்றிய அமைச்சர் பதவி, 10 மக்களவை சீட், ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் தேர்தல் செலவுக்கு பணம் என்று ஆசை வார்த்தை கூறியதால் பாஜவுடன் கூட்டணி வைக்க அன்புமணி சம்மதித்ததாக கூறப்படுகிறது. இதனால் தந்தை-மகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாஜ-பாமக இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.

ராமதாசை மீறி அன்புமணி தன்னிச்சையாக முடிவு எடுத்ததால் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  உடனே அவர்களை அழைத்து கூட்டம் நடத்தி சமரசம் செய்ய அன்புமணி முடிவு செய்தார். அதன்படி கூட்டணி குறித்து முடிவு எடுக்க ராமதாஸ் தலைமையில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம் தைலாப்புரத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

அதில் பாஜவுடன் கூட்டணி வைப்பதற்கான அவசியம் குறித்து அன்புமணி, மாவட்ட செயலாளர்கள் மத்தியில் விளக்குவார் என தெரிகிறது. காலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்து மாலையில் யாருடன் கூட்டணி என்பதை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பார் என அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

11 − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi