சென்னை: நமதுரிமை காக்கும் கட்சி பொதுச்செயலாளர் செங்கை பத்மநாபன் விடுத்துள்ள அறிக்கை: சீமான் சமீப காலமாக இந்து மக்களின் ஆதரவுக்காக திருநீர் இட்டு கொண்டு, கிறிஸ்துவர்களையும் இஸ்லாமியர்களையும் சாத்தானின் பிள்ளைகள், இந்து கடவுள்களையும் விமர்சனம் செய்தார். திராவிடத்தை உச்சகட்டமாக விமர்சித்தவர். காங்கிரஸ் கட்சியை திமுக கூட்டணியில் இருந்து விலக்கிவிட்டால் திமுகவுக்கு ஆதரவு அளிப்பாராம். நடிகர் விஜய் மீதான விமர்சனத்தை கடந்து தற்போது விஜய் கட்சி ஆரம்பித்தால் அவரையும் ஆதரிப்பாராம். பெரியார், அண்ணா, எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா, ரஜினி, வைகோ மற்றும் விஜயகாந்த் இவர்களையும் தமிழையும் எவ்வாறு பிரித்து பார்க்க முடியும்.
இவர்கள் மாற்று மொழியினர் என்று அவதூறு பேசும் சீமான், சிவசமய முன்னோர்களை உரிமை கோருவாராம். ஆனால் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகள் தமிழ்மொழியில் இருந்து பிறந்த மொழிகள், அத்தகையோர் தமிழ்மொழிக்கு உரிமைகோர கூடாதாம். எத்தகைய பித்தலாட்ட மோசடி, பிரிவினை பேச்சு. இவரது மனைவி தெலுங்கர், ஒருவர் எந்த மதத்தை சேர்ந்தவராக இருப்பினும் இந்திய குடிமகனாக இருந்தால் அவர் இந்தியரே. அதேபோன்று ஒரு மாநிலத்தில் பன்முகம் கொண்டு வாழும் அனைத்து மக்களும் அந்தந்த மாநில மொழியினரே. நேர்மையற்ற தகுதியற்ற சீமான் யாருக்கும் சான்றிதழ் தர தேவையில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.