திருச்சி: அனைத்து மாவட்டங்களிலும் வேளாண் சங்கம கண்காட்சி நடைபெறும் என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார். திருச்சி வேளாண் கண்காட்சி விழாவில் வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பேசுகையில், ‘கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் விவசாயிகள் எதையும் போராட்டம் நடத்தியே பெற வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இன்று அந்த நிலை மாற்றப்பட்டு மாவட்ட ஆட்சியர்களே விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் அளவுக்கு ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விவசாயிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற வேளாண் சங்கமம் கண்காட்சியை நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வேளாண் கண்காட்சியானது உழவர்களுக்கானது மட்டுமல்ல, பொதுமக்கள், ஆராய்ச்சி மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள பெரும் வாய்ப்பாக அமையும்’. இவ்வாறு அவர் பேசினார்.