சென்னை: அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் 25வது பொதுக்குழு கூட்டம், நாக்பூரில் தேசிய தலைவர் பாலகிருஷ்ண பார்ட்டியா தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் பிரவீண் கண்டேல்வால் வரவேற்றார். பொதுக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்றார்.
பொதுக்குழுவில் தேசியத் தலைவராக மீண்டும் பாலகிருஷ்ண பார்ட்டியா, பொதுச்செயலாளராக பிரவீண் கண்டேல்வால், தேசிய முதன்மை துணை தலைவராக விக்கிரமராஜா, தேசிய இணை பொதுச்செயலாளராக பேராசிரியர் ராஜ்குமார், தேசிய சேர்மனாக பிரிட்ஜ்மோகன் அகர்வால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொதுக்குழுவில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர் ஸ்மிருதி இரானி, அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் தேசிய கவுரவ ஆலோசகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.