சென்னை: அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க, பதிவுசெய்த அரசியல் கட்சி என ஆதாரத்துடன் விண்ணப்பித்தால் பரிசீலிக்கலாம் என தேசிய மக்கள் சக்தி கட்சி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியும் என்றும், மனுதாரர் கட்சி பொதுத்துறை செயலாளரிடம் விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கட்சியின் பதிவு தொடர்பான ஆதாரத்துடன் பொது துறையிடம் இன்றே விண்ணப்பிக்க மனுதாரர் கட்சிக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.