Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழ்நாடு முழுவதும் 2,153 போலீசாருக்கு பணியிட மாறுதல்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 2,153 போலீசாருக்கு பணியிட மாறுதல் வழங்கி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சென்னை டிஜிபி அலுவலகத்தில் வாரந்தோறும் காவலர் குறை தீர்க்கும் முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமில், டிஜிபி சங்கர் ஜிவாலிடம் மாவட்டம் விட்டு மாவட்டமும், மாநகரம் விட்டு மாநகரமும் பணியிட மாற்றம் கோரி காவலர்கள் பலர் மனு அளித்தனர். இதேபோல், டிஜிபி சங்கர் ஜிவால் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆய்வு செல்லும் போதும் காவலர்கள் பலர் மனு அளித்தனர். இந்நிலையில், டிஜிபியிடம் காவலர்கள் அளித்துள்ள மனுக்களில், தகுதியுடைவர்களை கண்டறிந்து, தமிழகம் முழுவதும் காவலர்கள், முதல் நிலைக் காவலர்கள், தலைமை காவலர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஆகிய நிலைகளில் பணிப்புரியும் 2,153 பேரை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டார்.

இது குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 2,153 காவல்துறையினர் நகரங்கள், மாவட்டங்களுக்கு இடையே பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் முதல் நிலை காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை பணியிட மாறுதல் கோரி மனு அளித்தனர். மனுக்களின் அடிப்படையில் 2,153 காவலர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டாயிரத்து ஐம்பத்து மூன்று காவலர்கள்,அவர்களின் கோரிக்கையின் பேரில் ஒவ்வொருவருக்கும் குறிப்பிடப்பட்டுள்ளபடி நகரங்கள்/மாவட்டங்களுக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர்கள், அதற்கேற்ப தேவையான உத்தரவுகளை பிறப்பித்து, பணியில் இருந்து விடுவிக்கப்படும் மற்றும் புதிய இடத்தில் பணியில் சேரும்தேதியை உடனடியாக தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.ஒரு இடத்தில் 3 ஆண்டுகளுக்கு குறைவாக பணியாற்றியவர்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட மாட்டாது. காவலர்களுக்கு ஏதேனும் பாதகமான அறிவிப்பு வந்தாலோ அல்லது அவர்கள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலோ அல்லது அவர்கள் ஏதேனும் புகாரின் கீழ் இருந்தாலோ அவர்களை விடுவிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், எவரேனும் கடந்த ஓராண்டில் நிர்வாகக் காரணங்களுக்காக முன்னர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தால், தலைமை அலுவலகத்திற்கு உண்மையைத் தெரிவிக்கலாம். இதேபோல், காவலர்கள் யாரேனும் அவர்களுக்கு எதிராகக் குறிப்பிடப்பட்டுள்ள தற்போதைய பிரிவில் இருந்து ஏதேனும் சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தால், அவர்கள் இப்போது இந்த உத்தரவில் பணியமர்த்தப்பட்டுள்ள மாவட்டம்/நகரத்திற்கு விடுவிக்கப்பட மாட்டார்கள். இந்த இடமாற்றங்கள் காவலர்களின் கோரிக்கையின் பேரில் மட்டுமே உத்தரவிடப்படுகின்றன. எனவே ரத்து செய்வதற்கான கோரிக்கை பரிசீலிக்கப்படாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.