சென்னை: தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் 7வது வாரிய கூட்டம் வாரியத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஏ.நாராயணன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு கடற்கரையோரமுள்ள 14 மாவட்டங்களில் 1076 கிமீ தொலைவிற்கு 1 கோடி பனை விதைகள் நடும் திட்டம் 24.9.2023 அன்று தொடங்கப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் 2 கோடி பனை மரக்கன்றுகள் நடும் பணியை தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி மாணவர்களின் ஒத்துழைப்போடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்திற்கு தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் முன்னிலை வகித்தார். வாரியச் செயலாளர் திவ்வியநாதன் வரவேற்றார், நிர்வாக அலுவலர் ஞானசம்பந்தன் நன்றி கூறினார்.