சென்னை: அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. 2025 ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் தேர்வு நடத்தப்படுகிறது. கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அக்.15-ல் முதனிலை தேர்வுகள் கருத்தியல் தேர்வு, அக்.16-ல் செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. தனித் தேர்வராக விண்ணப்பிக்க செப்.18 கடைசி நாள் ஆகும். www.skilltraining.tn.gov.in-ல் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தேர்வு கட்டணம் ரூ.200 செலுத்த வேண்டும் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.