இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் ஆஸி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அலெக்ஸ் கேரி 156 ரன் குவித்தார். ஆசிய ஆடுகளங்களில் இதற்கு முன் அதிக ரன் குவித்த ஆஸி விக்கெட் கீப்பராக ஆடம் கில்கிறிஸ்ட் 144 ரன்னுடன் முன்னிலை வகித்து வந்தார். 2004ம் ஆண்டு, இலங்கை அணிக்கு எதிராக அவர் இந்த சாதனையை படைத்திருந்தார். 20 ஆண்டுகளுக்கு பின் அந்த சாதனையை தற்போது அலெக்ஸ் கேரி தகர்த்துள்ளார்.
தவிர, இலங்கையில் அந்நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 150 ரன்னுக்கு அதிகமாக குவித்த, ஆசியாவை சாராத விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பட்டியலிலும் அலெக்ஸ் கேரி இணைந்துள்ளார். இந்த பட்டியலில் ஜிம்பாப்வேயின் ஆண்டி பிளவர் (232 நாட் அவுட், 183 நாட் அவுட்), தென் ஆப்ரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ் (164), ஜிம்பாப்வேயின் டடெண்டா டெய்பு (153), வெஸ்ட் இண்டீசின் கிளைவ் லாயிட் (152), நியூசிலாந்தின் வாரன் லீஸ் (152) உள்ளனர்.


