Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மது போதையில் ஆபாச நடனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோயில் 3 அர்ச்சகர்கள் மீது வழக்குப்பதிவு!!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் மது போதையில் சினிமா பாடலுக்கு ஆபாசமாக நடமாடிய விவகாரத்தில் உதவி அர்ச்சகர் பணி நீக்கம் செய்யப்பட்டதுடன், 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் பங்குனி மாதம் நடைபெறும் பூக்குழி திருவிழா பிரபலமானது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

பக்தி மணம் கமழும் இந்த கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள், மதுபோதையில் கோயில் வளாகத்தில் உள்ள அறை ஒன்றில் ஆபாச நடனமாடி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கோயிலுக்கு வந்த பெண் மீது விபூதி அடித்த அர்ச்சகர்கள் அடாவடியில் ஈடுபட்ட விடியோவும் வெளியாகியுள்ளது. அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், மாரியம்மன் கோயில் உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும், தற்காலிக அர்ச்சகர்கள் வினோத், கணேஷன் உள்ளிட்டவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தலை மறைவாக உள்ள 4 பேரையும் தேடி வருகின்றனர். இதையடுத்து அர்ச்சகர்கள் ஆபாச நடனம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரிய மாரியம்மன் கோயில் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் அர்ச்சகர்களை கைது செய்யவேண்டும் என வலியுறுத்தினர்.