Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுபானம் கடத்திய வாலிபர் கைது

செய்யூர்: சூனாம்பேடு பகுதியில் மதுபானம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு அடுத்த கொளத்தூர் சோதனை சாவடி பகுதியில் நேற்று சூனாம்பேடு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், இருசக்கர வாகனத்தில் 130 புதுச்சேரி மதுபான பாட்டில்கள் இருப்பதை அறிந்தனர்.

தொடர் விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் கொளத்தூர் பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் பசுபதி(27) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் பசுபதியை கைது செய்து அவரிடமிருந்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.