சென்னை: நேபாள நாட்டை சேர்ந்தவர் ரமேஷ் (25). இவர், கடந்த ஒரு மாதமாக மனைவி சீதா (24), மகன் ரோஷன் (6), ரோகித் (5), மகள் அனுஷ்கா (2) ஆகியோருடன் மாடம்பாக்கம் பகுதியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, காவலாளியாக வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு கட்டிடத்தின் மொட்டை மாடியில் மது அருந்திய ரமேஷ், அங்கேயே உறங்கியுள்ளார்.
நள்ளிரவில் அவரது அலறல் சத்தம் கேட்டு சீதா வந்து பார்த்தபோது, அவரது கணவர் வீட்டின் அருகில் உள்ள காலி இடத்தில் கீழே விழுந்து, பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிந்தது. இதுகுறித்து சேலையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.அண்ணாநகர்: முகப்பேர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முனுசாமி (53), பிளம்பர். இவர், நேற்று முன்தினம் மது போதையில் 3வது மாடிக்கு சென்றபோது, படிக்கட்டில் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்து, பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜெ.ஜெ.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.