ஆலந்தூர்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில், உலக தாய்ப்பால் வாரம் மற்றும் உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, ஆலந்தூர் நீதிமன்றம் அருகே நாளை அதிகாலை 5.30 மணியளவில் பிரமாண்ட விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. மாவட்ட மருத்துவர் அணியின் தலைவர் டாக்டர் ஆர்.எஸ்.கிருத்திகாதேவி தலைமை தாங்குகிறார். ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், பகுதி செயலாளர் பி.குணாளன், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் செந்தில்குமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பேராசிரியர் எல்.பிரபு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ் ஆகியோர் வரவேற்கின்றனர். போட்டியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கொடியசைத்து துவக்கிவைத்து, வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிக்கிறார்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மருத்துவர் அணி தலைவர் கனிமொழி, என்விஎன்.சோமு எம்பி, செயலாளர் எழிலன் நாகநாதன் எம்எல்ஏ உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். முன்னதாக, விழிப்புணர்வு மாரத்தான் போட்டிக்கான டி-ஷர்ட்டுகளை மாவட்ட திமுக மருத்துவர் அணியினர் அறிமுகப்படுத்தி வைத்தனர். ஏற்பாடுகளை காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மருத்துவர் அணி, இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.