சென்னை: உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வி.பி.சிங் மண்ணில் சமூகநீதி சுடரை ஏந்தி சென்று, முற்போக்கு அரசியல் பாதைக்கு ஒளியூட்டி, பிற்போக்கு கருத்தியல்களுக்கு எதிராக, தங்கள் தந்தை முலாயம் சிங் பெருமைமிகு வழியில் எப்போதும் உறுதியாக நிற்பீராக. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அகிலேஷ் யாதவ் பிறந்த நாள் முதல்வர் வாழ்த்து
0