மும்பை: போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜாஸ் கான், 2 ஆண்டுக்கு பின்னர் சிறையில் இருந்து விடுக்கப்படுகிறார். மும்பையை சேர்ந்த டிவி நடிகர் அஜாஸ் கான் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது அஜாஸ் கானுக்கு சொந்தமான இரண்டு இடங்களில் போதைப் பொருள் அதிகாரிகள் சோதனை நடத்தி, ரூ.2 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை மீட்டதாகக் கூறப்படுகிறது.
இவ்வழக்கில் ஆர்தர் ரோடு சிறையில் கடந்த 2 ஆண்டுகள் 2 மாதங்களாக சிறையில் இருந்த அஜாஸ் கான், தற்போது நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளார். இதுதொடர்பாக அவரது மனைவி ஆயிஷா வெளியிட்ட அறிக்கையில், ‘மிகவும் மகிழ்ச்சியான தருணம், அவரை வீட்டில் காண ஆவலுடன் உள்ளோம். கடந்த ஆண்டுகளில் அவரை மிகவும் தவறவிட்டோம்’ என்று தெரிவித்துள்ளார்.