சென்னை: தமிழ்நாடு ஏஐடியுசி பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: விலைவாசி உயர்வுக்கு காரணமான, வேலையின்மையை அதிகரித்த, மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கிற, இந்தியை திணித்து தமிழைப் பழிக்கிற, சொந்த லாபங்களுக்காக நாட்டை நாசமாக்குகிற பாஜவே ஆட்சியை விட்டு வெளியேறு என்னும் முழக்கத்தோடு செப்டம்பர் 12, 13, 14 தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் மறியல் நடத்தப்படுகிறது. தொழிலாளி வர்க்க அரசியல் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதற்கான அறைகூவல் விடுத்துள்ளது.இந்த மூன்று நாள் தொடர் மறியலை முழுமையாக ஆதரிப்பதோடு அதில் பங்கேற்பது என்றும் தமிழ்நாடு ஏஐடியூசி முடிவு செய்கிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.